esevai.net
esevai.net

தமிழக நிலவிபரங்களை பயன்படுத்தி எவ்வாறு பட்டா/சிட்டா மற்றும் வரைபடம் பதிவிறக்கம் செய்வது?

நாம் மிக எளிதாக தமிழ்நாடு நில விபர இணையத்தை பயன்படுத்தி நமது அல்லது நமக்கு தேவையான நில விபரங்களை பார்வையிடவும் தரவிறக்கம் செய்யவும் முடியும்.

முதலில் கீழ்க்கண்ட தமிழ்நாடு நிலவிபர இணையத்தை திறக்கவும்.
தமிழக நில விபரங்கள் ↗
நீங்கள் இந்த பக்கத்தை திறந்தவுடன் அதில் காணப்படும் “பட்டா/சிட்டா/நிலவரைபட” பொத்தானை கிளிக் செய்யவும்.
தமிழக நில விபரங்கள் இணையதள பக்கம்
படம் 1 — தமிழக நில விபர இணையதள பக்கம்
தோன்றும் பக்கத்தில் உங்களுக்கு தேவையான (1) மாவட்டம், (2) வட்டம், (3) கிராமம், (4) பட்டா எண் அல்லது புலன் எண், (5) நிலவகை, (6) பட்டா அல்லது புல விபரங்களை உள்ளிடவும்.
நில விபர தேடல் படிவம்
படம் 2 — தேவையான நில விபரங்களைத் தேர்வு செய்தல்
(7) தங்களுடைய கைபேசி எண்ணை உள்ளீடு செய்து OTP Verification செய்யவும்.
(8) சமர்ப்பி பட்டனை கிளிக் செய்து தங்களது சிட்டாவை டவுண்லோடு செய்யவும்.
சிட்டா பதிவிறக்க முடிவு பக்கம்
படம் 3 — சிட்டா விவரத்தைப் பார்வையிட்டு பதிவிறக்கம் செய்தல்